search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.என்பிஎஸ்சி"

    • குரூப் 1, 2, 4 தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது.
    • இணையதள பக்கத்தில் புதிய பாடத்திட்டம் குறித்து அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு துறைகளில் உள்ள துணைக் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், உதவி ஆணையர் (வணிகவரி), நில நிர்வாகத்தின் துணை தாசில்தார் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

    குரூப் 1, 2, 4 தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. அதன்படி குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளன. குரூப் 1 தேர்வு ஜூலை 13ஆம் தேதியும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

    இந்த நிலையில் குரூப் -2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் புதிய பாடத்திட்டம் குறித்து அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மே 21-ம் தேதி நடைபெற்ற தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதி இருந்தனர்.
    • குரூப்-2 முதன்மைத் தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 25-ந் தேதி நடைபெறும்.

    தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 5,413 பணியிடங்களுக்கான குரூப் -2 குரூப்-2 ஏ முதல் நிலை தேர்வுகள் கடந்த மேமாதம் 21-ம் தேதி நடைபெற்றது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதி இருந்தனர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

    http://tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. குரூப் -2 பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×