என் மலர்
நீங்கள் தேடியது "விசாகப்பட்டினம் கடற்கரை"
- விசாகப்பட்டினம் கோகுல் பார்க் முதல் பீமலி கடற்கரை வரை 40 இடங்களில் காலை 6 மணி முதல் 8 மணி வரை பிளாஸ்டிக் சேகரிக்கும் பணி தொடங்கியது.
- கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக மெகா பீச் கிளீனிங் திட்டம் தொடங்கப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மெகா பீச் கிளீனிங் திட்டத்தின் மூலம் ஆந்திர மாநில அரசு முடிவு செய்தது.
அதன்படி விசாகப்பட்டினம் கோகுல் பார்க் முதல் பீமலி கடற்கரை வரை 40 இடங்களில் காலை 6 மணி முதல் 8 மணி வரை பிளாஸ்டிக் சேகரிக்கும் பணி தொடங்கியது.
இந்தப் பணியில் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் அமைப்பினர் அப்பார்ட்மெண்ட் அசோசியன் அசோசியேஷன், காலனி அசோசியேசன், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 22,517 பேர் பங்கேற்றனர்.
மொத்தம் 40 இடங்களில் கடற்கரையில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர், குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர். காலை 6 மணி முதல் 8 மணிக்குள்ளாக இரண்டு மணி நேரத்தில் சுமார் 75 டன் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாகப்பட்டின மாநகராட்சி கமிஷனர் லட்சுமி ஷா கூறுகையில்:-
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக மெகா பீச் கிளீனிங் திட்டம் தொடங்கப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. உலகில் இதுவரை யாரும் 2 மணி நேரத்தில் 75 டன் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்காததால் இந்த நிகழ்வு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு ஆந்திரவில் அனைத்து கடற்கரைகளும் பொதுமக்கள் உதவியுடன் தூய்மைப்படுத்தப்படும். ஆந்திர மாநிலம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றப்பட உள்ளது என தெரிவித்தார்.






