என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் வீரபாண்டி"

    திருப்பூர் வீரபாண்டி பகுதியில் இன்று அதிகாலை பனியன் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள துணி பண்டல்கள் எரிந்து சேதமானது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் செல்லம்நகர் பகவதியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் வீரபாண்டி பகுதியில் பனியன் குடோன் வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வேலை முடிந்ததும் குடோனை பூட்டிவிட்டு சென்றார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் திடீரென குடோனில் தீப்பிடித்து அதிகளவில் புகை வெளியேறியது. இதைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கும், குடோன் உரிமையாளர் சுரேசுக்கும் தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ மளமளவென எரிந்ததால் அருகில் செல்ல முடியவில்லை.

    இதையடுத்து பனியன் குடோனில் சுவரை உடைத்து தண்ணீர் பீய்ச்சி அடித்து 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல லட்சம் மதிப்புள்ள துணி பண்டல்கள் எரிந்து சேதமானது தெரியவந்தது. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    ×