என் மலர்
நீங்கள் தேடியது "செல்போன் பறிப்பு கைது"
செல்போன் பறித்த கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சபீர் (21). இவர் நேற்று நள்ளிரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி முன்பு நண்பருடன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சபீர் வைத்திருந்த செல்போனை பறித்துகொண்டு தப்பினர். அப்போது அப்பகுதியில் உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் அந்த 3 வாலிபர்களையும் மடக்கி பிடித்தார். விசாரணையில் அவர்கள் அம்பத்தூர் புதூரை சேர்ந்த நீபக்ராஜ், ஓரகடத்தை சேர்ந்த சரண் குமார், அஜய் என்பது தெரிய வந்தது.
இதில் தீபக்ராஜ் அம்பத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். 3 பேரையும் போலீசார் கைது செய்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். #tamilnews






