என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகை இலியானா"

    தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த இலியானா, தற்போது இந்தயில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அடுத்ததாக இசை ஆல்பங்களை வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். #Ileana
    திருமணத்துக்கு முன் நான்கைந்து இசை ஆல்பங்களை வெளியிடும் முடிவில் களம் இறங்கியிருக்கிறார் இலியானா. `பெலி தபா’ என்ற அவர் ஆல்பம் ஏற்கெனவே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், காதலர் நீபோனைத் திருமணம் செய்தபிறகு ரசிகர்களைத் தன் குரலால் மயக்கப் போகிறாராம்.

    சினிமா வாய்ப்புகளுக்கு முன்னர் கோவாவில் சிறிய அளவுகளில் பேண்ட்களில் பாடி வந்த அனுபவத்தை இசை ஆல்ப வெளியீட்டின் மூலம் புதுப்பிக்கிறார் இலியானா. இந்தி, ஆங்கிலப் பாடல்களில் பாப் மற்றும் மென்மையான ராக் இசையில் புது ஆல்பத்துக்கான பணிகளை ஜூலையில் தொடங்க இருக்கிறாராம். #Ileana

    ×