என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி தீக்குளிக்க முயற்சி"

    சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் அளவிடும் பணி நடந்து வருகிறது. நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளி மனைவியுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் அளவிடும் பணி நடந்து வருகிறது. இன்று தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மஞ்சவாடி ஊராட்சி பகுதியில் வருவாய்த்துறையினர் போலீசாரின் பாதுகாப்புடன் இன்று நிலத்தை அளக்க சென்றனர்.

    அப்போது அதே ஊரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியும், விவசாயியுமான கார்த்திக் (வயது 35), அவரது மனைவி பாலாமணி, தாயார் ஜோதி மற்றும் 2 குழந்தைகளுடன் நின்று கொண்டு அதிகாரிகளுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார். தனது நிலத்தை அளந்தால் தீக்குளித்து விடுவேன் என்று மிரட்டினார்.

    அவரது கையில் மண்எண்ணை கேன் இருந்ததால் அதிகாரிகள் நிலத்தை அளக்கவில்லை. திடீரென்று அவரும் அவரது மனைவியும் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே வருவாய்த்துறை ஊழியர்களும், போலீசாரும் அவர்களது உடலை தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.

    பின்னர் அவர்களுக்கு வேறு துணிகளை கொடுத்து அணியவைத்தனர்.

    தீக்குளிக்க முயன்ற மாற்றுத் திறனாளி விவசாயி கார்த்திக் கூறியதாவது:-

    நான் சொந்தமாக கரும்பு தோட்டம் வைத்துள்ளேன். தோட்டத்திலேயே ரூ. 15 லட்சத்துக்கு வீடு கட்டி உள்ளேன். இன்னும் கிரகப்பிரவேசம் கூட நடத்த வில்லை. அதற்குள் எனது வீடும் கரும்பு தோட்டமும் பசுமை வழி சாலைக்காக இடிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

    இந்த தோட்டத்தை வைத்து தான் பிழைப்பு நடத்தி வந்தேன். இதுவும் போய்விட்டால் நான் என்ன செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×