என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோழிப்பண்ணையில் தீவிபத்து"

    புதுக்கோட்டை அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5ஆயிரம் குஞ்சுகள் தீயில் கருகி இறந்தன.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மூக்குடியை சேர்ந்தவர் சாத்தையா (வயது 35). இவர் அங்கு கோழிப்பண்ணை அமைத்து குஞ்சுகளை வளர்த்து வருகிறார். அவரது பண்ணையில் 20 நாட்கள் வளர்ந்த 5 ஆயிரம் கோழி குஞ்சுகள் இருந்தன.

    இந்தநிலையில் திடீரென்று கோழிப்பண்ணை கொட்டகை தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அறந்தாங்கி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கோழிப்பண்ணையில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் கோழி குஞ்சுகள் தீயில் எரிந்து பரிதாபமாக இறந்தன. மேலும் பல லட்சம் மதிப்பிலான கொட்டகை மற்றும் உபகரணங்கள் எரிந்து நாசாமாயின. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×