என் மலர்
நீங்கள் தேடியது "சிவகங்கை கலெக்டர் அலுவலகம்"
100 நாள் வேலை திட்ட நிதியை வேறு பணிகளுக்கு வழங்குவதை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை:
100 நாள் வேலை திட்ட நிதியை வேறு பணிகளுக்கு வழங்குவதை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட கிளை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் 150 நாள் வேலை வழங்க வேண்டும், தினக்கூலியாக ரூ.224 வழங்கப்படும் என்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும், வேலை செய்த 15 நாட்களில் சம்பளம் வழங்க வேண்டும், வேலை அட்டை இல்லாதவர்களுக்கு அட்டை வழங்க வேண்டும், கேரளாவில் விவசாயிகளுக்கு அரசு ஓய்வூதியம் வழங்குவது போன்று தமிழகத்திலும் விவசாயிகளுக்கு ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், 100 நாள் வேலை திட்ட நிதியை வேறு பணிகளுக்கு வழங்குவதற்கு கண்டனம் தெரிவித்தும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மொக்கைராஜ் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தண்டியப்பன், மாவட்ட செயலாளர் மணியம்மா, துணைச் செயலாளர் வேணுகோபால், நிர்வாகிகள் வெங்கையா, முத்துக்கருப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வீரபாண்டி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் கந்தசாமி, மெய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






