என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீனியர் ஆண்கள் கபடி போட்டி"

    தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக்கழகம் சார்பில் 32-வது மாவட்ட சீனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி தூத்துக்குடி மாவட்ட தருவை மைதானத்தில் 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக்கழகம் சார்பில் 32-வது மாவட்ட சீனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி தூத்துக்குடி மாவட்ட தருவை மைதானத்தில் 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சிக்கு அமெச்சூர் கபடிக் கழகத் தலைவர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக மகா சிமெண்ட் உதவித் தலைவர் சிவராமகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். போட்டிகள் காலை 8 மணிமுதல் இரவு 8 மணி வரை செயற்கை ரப்பர் ஆடுகளத்தில் புரோ கபடி முறையில் நாக் அவுட் முறையில் நடத்தப்படும்.

    போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டியிலும், இந்திய அளவிலான போட்டியிலும் தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பில் விளையாடுவார்கள்.

    போட்டியில் முதல் இடத்தை பெறும் அணிக்கு 50 ஆயிரமும், 2-மிடம் பிடிக்கும் அணிக்கு 30 ஆயிரமும், 3, 4-மிடம் பிடிக்கும் அணிக்கு 10 ஆயிரமும் வழங்கப்படும்.இதில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும். போட்டியை காண இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

    இத்தகவலை தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக் கழக செயலாளர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். #tamilnews
    ×