என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரத் வத்வானி"

    மறைந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன் மகசாசே நினைவாக வழங்கப்படும் மகசாசே விருதை அடுத்த மாதம் மணிலாவில் நடக்கும் விழாவில் 2 இந்தியர்களுக்கு வழங்கப்படுகிறது. #MagsaysayAward #BharatVaswani #SonamWangchuk
    மணிலா:

    மறைந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன் மகசாசே நினைவாக ஆசியா கண்டத்தில் அரசுப்பணி, பொது சேவை, சமூக சேவை, இலக்கியம், அமைதி, வளரும் தலைமை பிரிவுகளில் சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் ‘மகசாசே’ விருது வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல், மணிலாவில் நேற்று வெளியிடப்பட்டது. ‘ஆசியாவின் நோபல் பரிசு’ என்று அழைக்கப்படுகிற இந்த விருதை 6 பேர் பெற உள்ளனர். அவர்களில் 2 பேர் இந்தியர்கள். அவர்கள், பரத் வத்வானி, சோனம் வாங்சுக் ஆவார்கள்.



    பரத் வத்வானி, மும்பையை சேர்ந்த மனநல மருத்துவ நிபுணர் ஆவார். இவர், மனநலம் பாதித்து தெருக்களில் வாழ்நாட்களை கழித்துக்கொண்டிருக்கிற ஆயிரக்கணக்கானோரை மீட்டு சிகிச்சை அளித்து, அவர்களது குடும்பங்களுடன் இணைத்ததற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

    சோனம் வாங்சுக், காஷ்மீர் மாநிலம், லடாக்கை சேர்ந்த என்ஜினீயர் ஆவார். இவர் சமூகத்தின் முன்னேற்றத்துக்காக இயற்கை, பண்பாடு, கல்வி துறைகளில் செய்த பங்களிப்புக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அடுத்த மாதம் 31-ந்தேதி மணிலாவில் நடக்கிற விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.   #MagsaysayAward #BharatVaswani #SonamWangchuk #tamilnews 
    ×