என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டிப்பட்டி குவாரி கற்கள்"

    ஆண்டிப்பட்டி அருகே குவாரியில் கற்கள் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு பகுதியில் ஆற்று மணல் மற்றும் கனிம வளங்கள் அதிக அளவில் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. போலீசார் மற்றும் கனிமவளத்துறையினர் கடத்தல் கும்பலை பிடித்து அபராதம் விதித்தபோதும் மணல், கனிமங்கள் கொள்ளை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

    கருப்பையாபுரம் பஞ்சந்தாங்கி ஓடை அருகே அரசுக்கு சொந்தமான குவாரி உள்ளது. தற்போது ஏலம் யாரும் எடுக்க வில்லை. இருந்தபோதும் இங்கிருந்து கற்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கடமலைக்குண்டு போலீசார் வருசாடு-தேனி சாலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை மறித்து சோதனையிட்டபோது குவாரியில் இருந்து உடை கற்கள் கடத்தியது தெரிய வந்தது. போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவர் கண்ணன் மற்றும் உரிமையாளர் சிவா மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். #Tamilnews

    ×