என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு கலெக்டர் பிரபாகர்"

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கடந்த 01.04.2017ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 6,86,104 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கடந்த 01.04.2017ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 6,86,104 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மேலும் புதியதாக மின்னணு குடும்ப அட்டைகள் வேண்டி விண்ணப்பம் செய்தவர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு கைப்பேசியில் குறுஞ்செய்தி வரப்பெற்ற பயனாளிகள் தங்களுக்குரிய தாசில்தார் அலுவலகத்தில் செயல்படும் வட்டவழங்கல் அலுவலகத்தில் உரிய ஆதார ஆவணங்களை சமர்ப்பித்து புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்.

    ஆகவே செல்போனில் வரும் எஸ்.எம்.எஸ். தகவலை அவ்வப்போது பார்த்து தெரிந்து கொண்டு ஸ்மார்ட் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

    ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் இதனை தெரிவித்துள்ளார். #SmartCards
    ×