என் மலர்
நீங்கள் தேடியது "பின்லேடன் தாயார்"
ஜெட்டா:
அல்கொய்தா பயங்கரவாதி இயக்கத்தின் தலைவராக பின்லேடன் இருந்தார். உலக நாடுகளை அச்சுறுத்திய அவர் கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பின்லேடன் தாயார் அலியா தற்போது சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் வசித்து வருகிறார். பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு முதன் முறையாக ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
‘‘எனது மகன் (பின்லேடன்) மிகவும் நல்லவன். மாணவ பருவத்தின் போது அவன் மூளைசலவை செய்யப்பட்டான். சவுதி அரேபியாவில் பல்கலைக் கழகத்தில் படித்தபோது கலாசார குழு ஒன்றுடன் அவனுக்கு தொடர்பு ஏற்பட்டது. எனவே அந்த குழுவிடம் இருந்து விலகி இருக்குமாறு அவனிடம் தொடர்ந்து வலியுறுத்தினேன். இருந்தும் அவன் வித்தியாசமான மனிதனாக ஒரு பயங்கரவாதியாக மாறினான்.
அவன் என்ன செய்கிறான் என்பதை என்னிடம் ஒருபோதும் தெரிவித்ததில்லை. ஏனெனில் என்னை மிகவும் நேசித்தான்’’ என்றார். #BinLaden






