என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதிரேலியா பாராட்டு"

    தமிழகம் முழுவதும் 15 இடங்களில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் தாய்ப்பால் வங்கித் திட்டத்துக்கு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் விபத்து காய சிகிச்சை மையங்களை மேலும் வலுப்படுத்துவது குறித்து அறிந்து கொள்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமையிலான குழு அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். இந்த குழுவிற்கு விக்டோரியா மாநில சபாநாயகர் சிறப்பான வரவேற்பு அளித்து பாராளுமன்றத்தில் சிறப்பு விருந்தினர்களாக கவுரவித்தார்.

    விக்டோரியா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜில் ஹென்னசி, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தாய்மார்கள், குழந்தைகள் சேர்ந்து இருக்க முடியாத சூழ்நிலையிலும் அக்குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 15 இடங்களில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் தாய்ப்பால் வங்கித் திட்டம் உலக அளவில் மிகச் சிறந்த திட்டம் என்று மனம் திறந்து பாராட்டினார்.

    உலக அளவில் மிக அரிய சிகிச்சையான கைகள் மாற்று அறுவை சிசிச்சை தமிழகத்தில், அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்திருப்பது குறித்து ஆர்வமுடன் கேட்டறிந்து, இது சிறப்பான அரும்பெரும் மருத்துவ சாதனை என்று ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜில் ஹென்னசி குறிப்பிட்டார். #tamilnews
    ×