என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வித்துறை வளாகம்"

    கல்வி துறை வளாகத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கூட்டமைப்பு பொறுப்பாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார்.
    புதுச்சேரி:

    நிலுவையில் உள்ள 6 மாத சம்பளத்தை வழங்க வேண்டும். 7-வது ஊதிய குழு பரிந்துரையை அமுல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு உயர்த்தியது போல் வீட்டு வாடகைப்படியை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று கல்வி துறை வளாகத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கூட்டமைப்பு பொறுப்பாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார்.

    போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று கல்வித்துறை வளாகத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்தனர். தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை போராட்டத்தை தொடர உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    ×