என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலிக்க மறுத்த பெண்"

    காதலிக்க மறுத்த பெண்ணை 38 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். #WomanStabbed
    இந்தூர்:

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் சங்லி காலனியில் வசித்து வந்தவர் சுப்ரியா  ஜெயின். நேற்று முன்தினம் இரவு இவரை 25 வயது வாலிபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர். ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சுப்ரியாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடலில் 38 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருந்தது.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலேஷ் சாஹு என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், காதலிக்க மறுத்ததால் கொலை செய்தது தெரியவந்தது.

    சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரியா ஜெயினும், கமலேஷ் சாஹுவும் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்துள்ளனர். அப்போதிருந்தே சுப்ரியாவை கமலேஷ் தீவிரமாக காதலித்துள்ளார். 6 வருடங்களுக்கு முன்பு காதலை சொன்னபோது, அவரது காதலை சுப்ரியா ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கமலேஷ் கையில் பிளேடால் அறுத்துக்கொண்டுள்ளார். இதனால் வேறுவழியில்லாமல் காதலிப்பதாக கூறி அவரிடமிருந்து தப்பித்துச் சென்றுள்ளார் சுப்ரியா.

    பின்னர் படிப்பை தொடர்வதற்காக இந்தூர் வந்துள்ளார் சுப்ரியா. 6 மாதங்களுக்கு முன்பு, அவரை சந்தித்த கமலேஷ் மீண்டும் காதலை சொல்லியிருக்கிறார். ஆனால் சுப்ரியா மறுத்துவிட்டார். பின்னர் சமூக வலைத்தளம் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த கமலேஷ், திட்டமிட்டு சுப்ரியாவை கொடுரமாக கொலை செய்துள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #WomanStabbed
    ×