என் மலர்
நீங்கள் தேடியது "அனேகன்"
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் நடித்த நடிகை அமைரா தஸ்தூர், நானும் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன் என்று கூறியிருக்கிறார். #Amyra
தற்போது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. இவர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து #METOO வை பயன்படுத்தி பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தனுஷுடன் அனேகன் படத்தில் நடித்த நடிகையும், தற்போது இந்தி படங்களில் நடித்து வரும் நடிகை அமைரா தஸ்தூர், ஆங்கிலே ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் என்னுடன் நடித்த நடிகர் என்னைத் தவறான முறையில் கட்டியணைத்தார்.
இதை நான் உணர்ந்து உடனடியாக இயக்குனரிடம் புகார் செய்த போது அவர் அதை கண்டு கொள்ள வேண்டாம் என்று கூறி வேண்டுமென்றே படக்காட்சியைத் தாமதமாகப் பதிவு செய்தனர். சில இடங்களில் அந்த நடிகரை உதாசீனப்படுத்தியதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அந்த நடிகரிடம் என்னை மன்னிப்பும் கேட்கச் சொன்னார்.

என்னிடம் தவறாக நடந்தவர்கள் யார் என்று இப்போது கூற மாட்டேன், அவர்கள் இந்த துறையில் மிகவும் பலம் வாய்ந்தவர்கள். அவர்கள் எனக்கு என்ன செய்தார்கள் என்பதை ஒருநாள் நிச்சயம் சொல்வேன்' என்று கூறியுள்ளார்.






