என் மலர்
நீங்கள் தேடியது "திருவண்ணாமலை கோர்ட்டு"
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள கஸ்தூரி நகரில், தனியாருக்கு சொந்தமான அபார்ட் மென்டில் தங்கி இருந்த ரஷிய நாட்டை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ரஷிய இளம்பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கீழ்பென்னாத்தூர் வேடநத்தம் பகுதியை சேர்ந்த நீலகண்டன் (35), அவரது தம்பி பாரதி (31), திருவண்ணாமலை செங்கம் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (37), பாவாஜி நகரை சேர்ந்த வெங்கடேசன் (30) ஆகி யோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் 4 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணா மலை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக ரஷிய இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்தார். தற்போது அவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கி உள்ளார்.
நேற்று மாலை இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நீதிபதி (பொறுப்பு) தேவநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் ரஷிய இளம்பெண் ஆஜராகி தனது தரப்பு வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) நீதிபதி ஒத்தி வைத்தார்.






