என் மலர்
நீங்கள் தேடியது "சினிமா டிக்கெட் கட்டணம்"
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி விகிதம் குறைக்கப்பட்டதையடுத்து, சினிமா டிக்கெட்டுகளின் விலை இன்று குறைந்தது. #GST #CinemaTicketPrice
டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி விகிதம் இருவகையாக குறைக்கப்பட்டது.
ரூ.100 வரையிலான டிக்கெட் கட்டணம் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், ரூ.100-க்கும் கூடுதலாக உள்ள சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.
இந்த வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களிலும் டிக்கெட் கட்டணம் குறைந்தது.
அதன்படி முதல் வகுப்பு கட்டணம் ரூ.190.78 ஆகவும், 2-ம் வகுப்பு கட்டணம் ரூ.60.12 ஆகவும் குறைக்கப்பட்டது.

சென்னையில் பிற இந்தி மொழி படங்கள் திரையிடும் தியேட்டர்களில் முதல்வகுப்பு கட்டணம் ரூ.202.84 ஆகவும் 2-ம் வகுப்பு கட்டணம் ரூ.63.73 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலப் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களில் முதல் வகுப்பு கட்டணம் ரூ.211.46 ஆகவும், 2-ம் வகுப்பு கட்டணம் ரூ.66.30 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
கட்டண குறைப்புக்கு ஏற்றவாறு ஆன்லைனிலும் கட்டண விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர். #GST #CinemaTicketPrice






