என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Single Elephant Movement In Bargur"

    பர்கூர் மலைப்பகுதி சாலையில் ஒற்றை யானை ஒன்று சுற்றி திரிவதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுரை கூறி உள்ளனர்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியையொட்டி உள்ளது பர்கூர் வனப்பகுதி இங்கு ஏராளமான மலை கிராமங்கள் உள்ளது.

    திடீர்... திடீரென யானைகள், மான்கள் போன்ற வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடும். ஊருக்குள் புகும் யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்ட பொதுமக்களுக்கும், வனத்துறையினருக்கும் போதும்... போதும் என்றாகி விடும்.

    இந்த நிலையில் பர்கூர் மலை பகுதி மேற்கு மலை என்ற ஊருக்கு செல்லும் வழியில் தாளக்கரை பிரிவு அருகே ஒற்றை யானை ஒன்று ரோட்டில் நடமாடுகிறது. ஒற்றையடி பாதையாக உள்ள அந்த ரோட்டில் அந்த பகுதி மக்கள் நடந்து செல்வார்கள். மேலும் அருகே தான் ஊரும் உள்ளது.

    ஆகவே பர்கூர் மேற்கு மலைப்பகுதி மக்கள் ரோட்டில் நடந்து செல்லவும் வீட்டை விட்டு வெளியே வரவும் பயப்படுகிறார்கள்.

    எனவே ரோட்டில் சுற்றி திரியும் இந்த ஒற்றை யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

    மேலும் வனத்துறையினரும் பொதுமக்களை கவனமாக இருக்கும்படி அறிவுரை கூறி உள்ளனர்.
    ×