என் மலர்
நீங்கள் தேடியது "Sikh Youth Murdered"
- சிமர்ஜித்சிங் நங்கபாலுக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- சிமர்ஜித்சிங் கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
லண்டன்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தெற்கு மேற்கில் உள்ள ஹவுன்ஸ்லோ பகுதியில் வசித்து வந்தவர் சீக்கிய வம்சாவளியை சேர்ந்த சிமர்ஜித்சிங் நங்கபால் (வயது 17).
இந்தநிலையில் சிமர்ஜித்சிங் நங்கபாலுக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சாலையில் ஏற்பட்ட இந்த தகராறில் கைகலப்பு ஏற்பட்டது.
இதில் சிமர்ஜித்சிங்கை அக்கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தியது. ரத்த வெள்ளத்தில் விழுந்த அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிமர்ஜித்சிங் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். சிமர்ஜித்சிங் கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.






