என் மலர்
நீங்கள் தேடியது "sibi chakkaravarthi"
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் போஸ்டரையும் படத்தில் இணைந்துள்ள பிரலங்கள் பற்றியும் படக்குழு அறிவித்திருந்தது. ஜெயிலர் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரஜினி - சிபி சக்கரவர்த்தி
இந்நிலையில் ரஜினியின் 170-வது படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரஜினியின் 170-வது படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டான்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தனது இரண்டாவது படத்திலேயே ரஜினியுடன் இணைவது ரசிர்களின் எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.






