search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Showcase"

    • படம் வைக்கும்போது ஜோடியாக வைப்பதுதான் முறை.
    • வாஸ்து ரீதியாக அமைத்து பராமரித்து வருவது வழக்கத்தில் இருக்கிறது.

    உள் அலங்கார யுக்திகளில் ஒன்றாகவும், அலங்கார கலைப்பொருள் என்ற கண்ணோட்டத்துடன் வீட்டின் உட்புறமாகவும், வெளிப்பகுதிகளிலும் சிலைகள் வைக்கப்பட்டாலும், வாஸ்து ரீதியான அணுகுமுறை யாகத்தான் அவை கவனிக்கப்படுகின்றன. அறைகளை அலங்கரிக்கும் உள்கட்டமைப்பு முறைகளில் பல்வேறு நவீன அணுகுமுறைகள் இப்போது கையாளப்பட்டு வருகின்றன. அவற்றில் பிரத்யேகமான முறையாக மண் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட சிலைகளை வீடுகளின் முக்கியமான இடங்களில் வைப்பதும் ஒன்று. பரவலாக நடைமுறையில் இருக்கும் அத்தகைய சிலை அலங்கார முறைகளில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    வீடுகளின் வரவேற்பறை, சுவர் அலமாரிகள், ஷோகேஸ், படிக்கும் அறை, பூஜையறை ஆகிய இடங்களில் பரவி இருக்கும் நேர்மறை சக்தி அலைகளை ஈர்க்கும் மையமாக பிள்ளையார் சிலைகள் அமைக்கப்படுகின்றன.

    வீடுகளில் வைக்கப்படுவது மட்டுமல்லாமல் தெரு முனைகளிலும் பிள்ளையார் சிலைகள் இருக்கின்றன. பிள்ளையார் சிலைகள் வைப்பது ஆன்மிக அடையாளம் என்ற நிலையை தாண்டி, வைக்கப்படும் இடத்தில் உள்ள பஞ்சபூத சக்திகளை நிலைப்படுத்தும் தன்மை கொண்ட வடிவியல் குறியீடாக வாஸ்து சாஸ்திரம் கவனிக்கிறது.

     வீடுகளின் நுழைவு வாசலில் பிள்ளையார் சிலை அல்லது படம் வைக்கும்போது ஜோடியாக வைப்பதுதான் முறை. ஒன்று நுழைவாயிலை பார்த்தவாறும், இன்னொன்று அதற்கு எதிர்ப்புறம் பார்த்தவாறு வைக்க வேண்டும். மற்ற இடங்களில் பிள்ளையார் சிலைகள் வைக்கப்படும்போது பெரிய அளவில் உள்ளவற்றை தவிர்த்து சிறிய அளவாக இருப்பதையே வைக்க வேண்டும்.

    வீடுகளை பாதிக்கும் தெருக்குத்து போன்ற வாஸ்து ரீதியான குறைகள் பிள்ளையார் சிலைகளை அமைப்பதன் மூலமாக சரி செய்யலாம் என்பது பரவலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக வீடுகளின் தெற்கு திசை, மேற்கு திசை மற்றும் தென்மேற்கு மூலை ஆகிய பகுதிகளில் தெருக்குத்து இருக்கும்பட்சத்தில் வீட்டு சுவரில் அல்லது சுற்றுச்சுவரில் கல்லால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலையை வாஸ்து ரீதியாக அமைத்து பராமரித்து வருவது வழக்கத்தில் இருக்கிறது.

     சீனாவில் இருந்து நமக்கு இறக்குமதியான பொருட்களில் சிரிக்கும் புத்தர் என்ற சிலை வடிவமும் ஒன்று. பெரும்பாலும் சீனக்களிமண்ணால் செய்யப்பட்ட சிரிக்கும் புத்தர் சிலைகள் மகிழ்ச்சியின் வெளிப்பாடான சிரிப்பை காட்டுவதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பார்ப்பவர்களது மனதில் அந்த சிலையானது மகிழ்ச்சியின் அலைகளை எதிரொலிக்கக்கூடிய மனோதத்துவத்தை உள்ளடக்கியதாக அதன் வடிவம் இருப்பதை நாம் உணர முடியும்.

     குபேரதிக்கு என்று சொல்லப்படும் வடக்கில் இந்த சிலைகளை வைக்க வேண்டும் என்பது முறையாகும். முற்றிலும் பொருளாதாரம் சார்பான கருத்தையும், அதன் வளர்ச்சியையும் குறியீடாக கொண்ட அடையாளமாக இந்த சிலை பார்க்கப்படுகிறது. வீடுகளில் இவை குபேரனின் அம்சம் என்ற கருத்துடன் வைத்து பராமரிக்கப்படுகிறது. படுக்கை அறைகளில் வைக்கப்படும் சிலைகளில் முக்கியத்துவம் பெற்றவையாக இவை உள்ளன.

    யானை அல்லது வாத்து சிலைகள் குடும்ப உறவுகளில் இருக்கும் கசப்பான உணர்வுகளை இனிமையாக மாற்றுவதற்கான மனோதத்துவ குறியீடுகளாக வைக்கப்படுகின்றன. பொதுவாக படுக்கை அறையில் வைக்கப்படும் அவை ஜோடிகளாக இருக்க வேண்டும்.

    சிலைகளாக அவற்றை வைக்க இயலாத நிலையில் அழகிய பிரேம்கள் பொருத்தப்பட்ட படங்களாகவும் படுக்கையறை சுவரில் மாட்டி வைக்கலாம் என்ற மாற்று முறையும் வாஸ்து வல்லுநர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    ×