search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shop shutters"

    வால்மார்ட் - பிலிப்கார்ட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 28-ந்தேதி நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. #walmart #flipkart
    புதுடெல்லி:

    ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிலிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை சர்வதேச நிறுவனமான வால்மார்ட் சமீபத்தில் கையகப்படுத்தியது. இதன் மூலம் இந்திய ஆன்லைன் மார்க்கெட்டில் வெளிநாட்டு நிறுவனமான வால்மார்ட் நேரடியாக கால் பதித்தது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் வால்மார்ட் - பிலிப்கார்ட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 28-ந்தேதி நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.

    கடையடைப்பு போராட்டம் தொடர்பாக அகில இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் தேசிய தலைவர் பி.சி.பார்ட்டியா, பொதுச் செயலாளர் பிரவீண் கண்டேல்வால் தலைமையில் டெல்லியில் நடந்தது.


    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா காணொளிக் காட்சி மூலம் பேசி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து செப்டம்பர் 28-ந்தேதி தமிழகம் முழுவதும் 21 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என்றார்.

    இந்த கூட்டத்துக்கு பிறகு புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் சுமார் 20 ஆயிரம் கடைகள் அமைக்கப்பட உள்ளன. வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க கடும் முயற்சியிலும் ஈடுபட்டது. இறுதியில் பிலிப்கார்ட் மூலமாக இந்தியாவில் நுழைந்துள்ளது.

    இந்த நிலையில் அமேசான் இணைய வர்த்தக நிறுவனத்தை சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் மேலும் கோடிக் கணக்கான சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #walmart #flipkart
    ×