என் மலர்
நீங்கள் தேடியது "Sexual harassment can also be reported"
- கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தல்
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மண்டலவாடி ஊராட்சி குன்னத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி பேசும்போது இளைஞர்கள் அதிகமாக போதைப் பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர்.
இளைஞர்கள் தங்களின் உடல் நலத்திலும் குடும்பத்தின் மீதும் அக்கறை செலுத்த வேண்டும். உங்களை நம்பி வாழும் பெற்றோர்களுக்கு நீங்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். இதனால் பள்ளி பருவத்தில் கல்வி கற்கும் நீங்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளிலும், தனிப்பட்ட இடங்களிலும் பாலியல் ரீதியாக சீண்டும் நபர்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கலாம்.
எனவே மாணவ மாணவிகள் வளரும் பருவத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடாமல் போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் கல்வியில் கவனம் செலுத்தி அதிகாரிகளாக வர வேண்டும் என்றார். இதில் சப் - இன்ஸ்பெக்டர்கள் காதர்கான், அரசு, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.






