என் மலர்

  நீங்கள் தேடியது "sena ask pm modi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது சரி, ஆனால் நாட்டில் வேலைவாய்ப்பு எங்கே கொட்டிக் கிடக்கிறது? என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. #Shivsena #GeneralCategoryQuota #PMModi
  மும்பை:

  சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

  இதற்கிடையே, மராட்டிய மாநிலம் மராத்வாடா பகுதியில் உள்ள சோலாப்பூர் நகரில் சோலாப்பூர்-உஸ்மானாபாத் இடையேயான 98 கி.மீ. தூர நான்கு வழிச்சாலையை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசுகையில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்று சாதனை என்று பெருமிதத்துடன் கூறினார்.   இந்நிலையில், இதுதொடர்பாக சிவசேனாவின் கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் பகுதியில் பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

  அதில், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது சரி, ஆனால் நாட்டில் வேலைவாய்ப்பு எங்கே கொட்டிக் கிடக்கிறது? இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு விளையாடுகிறது என தெரிவித்துள்ளது. #Shivsena #GeneralCategoryQuota #PMModi
  ×