search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selling products"

    தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கணேஷ் எச்சரித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைகளில் விற்கப்படும் உலர்ந்த பழங்கள் மற்றும் முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை விற்பனை செய்யும் போது பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும். அதனை வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்வது அவசியம்.

    மேலும் பொதுமக்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் தயாரிக்கப்படும் மற்றும் கடைகளில் விற்கப்படும் உலர்ந்த திராட்சை பழங்கள், முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை விற்பனை செய்யும் வணிகர்கள் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்படி பொட்டலமிட்ட உணவுப்பொருட்களின் மீது உணவு குறிப்புசீட்டு ஒட்டப்பட வேண்டும்.

    தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம், பதிவு எண்ணை பொட்டலத்தின் மீது குறிக்க வேண்டும். மேலும் உணவு கலப்படம் மற்றும் தரங்கள் குறித்து 94440-42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம். எனவே கடைகளில் விற்பனை செய்யப்படும் பொட்டலங்களின் மீது தயாரிப்பு மற்றும் காலாவதியாகும் தேதிகள் குறிப்பிடாத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    ×