என் மலர்
நீங்கள் தேடியது "Secuirty man arrest"
பெருந்துறை அருகே வேலையை விட்டு நிறுத்தியதால் தனியார் நிறுவனத்தில் வெடிகுண்டு பதுக்கி வைத்திருப்பதாக புகார் கூறிய காவலாளியை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் நாவிதன் தோட்டம் என்ற இடத்தில் தனியார் பைப் கம்பெனி உள்ளது.
இந்த கம்பெனியில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின்மூலம் காவலாளியாக நியமிக்கப்பட்டு பணிபுரிந்தவர் ஜெகதீஸ் (வயது 39). இவரது சொந்த ஊர் கரூர் அருகே உள்ள அருகம்பாளையம் ஆகும்.
காவலாளி ஜெகதீஸ் தனியார் கம்பெனி ஊழியர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். இதனால் கம்பெனியில் அவரை "இனி வேலைக்கு வர வேண்டாம்" என்று கூறி விட்டார்களாம். இதனால் அவர் வேலைக்கு வராமல் அங்கு சுற்றி கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ஜெகதீஸ் தனது செல்போனில் 100-க்கு போன் செய்தார். போனில் தான் வேலை பார்த்த தனியார் கம்பெனி பெயரை கூறி அங்குவெடி குண்டு பதுக்கி வைத்து உள்ளார்கள் என்று கூறினார். இந்த போன் சென்னை கண்ட்ரோல் அறைக்கு சென்றது. உடனே அவர்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து பெருந்துறை டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு தகவல் கூறினார்கள்.
பெருந்துறை டி.எஸ்.பி. ராஜாகுமார் உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வெடிகுண்டு பதுக்கி வைத்திருப்பதாக கூறிய காவலாளி ஜெகதீசை போலீசார் கைது செய்தனர்.
பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.