search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SCOTvNL"

    நெதர்லாந்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடருக்கான ஸ்காட்லாந்து அணியின் ஆலோசகராக ஹீத் ஸ்ட்ரீக் நியமிக்கப்பட்டுள்ளார். #SCOT #HeathStreak
    நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். ஸ்காட்லாந்து அயர்லாந்துக்கு எதிரான விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு போட்டி ‘டை’யில் முடிந்தது.



    இந்நிலையில் நெதர்லாந்துக்கு எதிரான இரண்டு ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. ஒரு ஆட்டம் நாளையும், மற்றொரு ஆட்டம் 20-ந்தேதியும் நடக்கிறது. இதில் ஸ்காட்லாந்து அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வேகக்பந்து வீச்சாளர் ஹீத் ஸ்ட்ரீக்கை ஆலோசகரான நியமித்துள்ளது.
    ×