என் மலர்

  நீங்கள் தேடியது "sankarankovil Taluk office"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வென்றிலிங்கபுரம் கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்ட கோரி 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
  சங்கரன்கோவில்:

  சங்கரன்கோவில் தாலுகா மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பட்டாடை கட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமம் வென்றிலிங்கபுரம். இங்கு 1991-ல் இருந்து வி.ஏ.ஒ. அலுவலகம் மற்றும் பஞ்சாயத்து வரி வசூல் மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் வென்றிலிங்கபுரத்திற்கு வேண்டும் என்று கோரி கிராம மக்கள் 1994-ல் இருந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடந்து வருகிறது.  

  இந்த நிலையில் கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆகியோர் பட்டாடைகட்டி பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் தட்டான்குளம் என்ற கிராமத்தில் கட்ட அனுமதி வழங்கி உள்ளனர்.  

  மேலும் வென்றிலிங்கபுரம் கிராமத்தில் சுமார் 3600 மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் தட்டான்குளம் கிராமத்தில் சுமார் 68 மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் வென்றிலிங்கபுரம் கிராமத்தில் சுமார் 280 ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். எனவே வென்றிலிங்கபுரம் கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  

  இது குறித்து மண்டல துணை தாசில்தார் செல்வக்குமாரிடம் மனு கொடுத்தனர்.
  ×