search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sand Quarry Siege Struggle"

    பண்ருட்டியில் மணல் குவாரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் உள்பட பலர் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த எனதிரி மங்கலம் கிராமத்தில் உள்ள தென் பெண்ணை ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.

    இந்த மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளபடுவதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுபாடு ஏற்படுவதாகவும் உடனடியாக மணல் குவாரியை மூட கோரி அந்த பகுதி பொது மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில்நேற்று முன்தினம் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் மணல் குவாரியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர், அரசு உடனடியாக மணல் குவாரியை மூட வேண்டும். இல்லையென்றால் கலெக்டர் அலுவலகம், அவரது வீடு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

    அதன் பிறகும் அரசு செவிசாய்க்கவில்லை எனில் தலைமை செயலகம் மற்றும் முதல்வர் பழனிசாமி வீட்டின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

    அதன் பின்பும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதி மன்றத்தில் சிறந்த நீதிபதியின் பார்வைக்கு இப்பிரச்சனை கொண்டு செல்லப்படும் என்றார்.

    மணல் குவாரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் உள்பட பலர் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ×