என் மலர்

  நீங்கள் தேடியது "Sale increase Ayyalur goat market"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்படுகிறது.
  • அடுத்தவாரம் தீபாவளிக்கு முந்தைய சந்தை என்பதால் இன்னும் விற்பனை களைகட்டும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

  வடமதுரை:

  திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்படுகிறது. ஆடுகள் மட்டுமின்றி நாட்டுக்கோழி, சேவல்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் ஆகியவையும் விற்பனைக்கு வருகின்றன.

  ஆடுகளை விற்க திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் அதிகாலையிலேயே சந்தைக்கு வந்துவிடுவது வழக்கம். தற்போது புரட்டாசி மாதம் நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்க உள்ள நிலையிலும், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருப்பதாலும் ஏராளமான வியாபாரிகள் வந்தனர்.

  குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் அகரம், குஜிலியம்பாறை, பாளையம், வேடசந்தூர், நத்தம், சாணார்பட்டி மற்றும் மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் நடந்து வருவதால் ஆடுகள் மற்றும் கோழிகளை வாங்க வியாபாரிகள் அதிகளவில் படையெடுத்தனர்.

  10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.10ஆயிரம், நாட்டுகோழி ரூ.350, சேவல் ரூ.400, எனவிற்பனையானது. பெரும்பாலும் பொதுமக்களே அதிகளவு வந்திருந்து ஆடு மற்றும் சேவல்களை வாங்கிச்சென்றனர். இதுதவிர பண்டிகை விடுமுறை நாட்களில் கிராமங்களில் நடத்தப்படும் கட்டுசேவல் பந்தயத்திற்காக சேவல்கள் வாங்கிச்செல்லப்பட்டன.

  இவ்வகை சேவல்கள் ரூ.3000 முதல் ரூ.30000 வரை விற்பனையாகியது. சேவலை சந்தையிலேயே விளையாட வைத்து வியாபாரிகள் வாங்கிச்சென்றனர்.

  அதிகாலை ெதாடங்கிய இந்த சந்தை விறுவிறுப்பாக நடைபெற்றதாலும், எதிர்பார்த்த விலை கிடைத்ததாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அடுத்தவாரம் தீபாவளிக்கு முந்தைய சந்தை என்பதால் இன்னும் விற்பனை களைகட்டும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

  ×