search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sacred Heart Catholic"

    சிதம்பரத்தில் இருதய ஆண்டவர் ஆலய ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
    சிதம்பரத்தில் இருதய ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து ஆலயத்தில் தினமும் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி மாலை 6 மணிக்கு ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனையும் நடைபெற்றது.

    பின்னர் ஆலயம் முன்பு மலர் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் நின்றிருந்த தேரில் இருதய ஆண்டவர் சொரூபம் வைக்கப்பட்டது. இதையடுத்து ஆலயத்தில் இருந்து ஆடம்பர தேர்பவனி தொடங்கியது.

    தூய இதயமரியன்னை பங்குத்தந்தை சூசை தலைமையில் நடைபெற்ற இந்த பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடினர். இந்த பவனி கனகசபைநகர், தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, போல்நாராயணன் தெருவழியாக மீண்டும் இருதய ஆண்டவரின் ஆலயத்தை வந்தடைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை 8 மணிக்கு ஆலயத்தில் கொடி இறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கு மன்ற செயலாளர் அலெக்ஸ்சாண்டர், துணைத்தலைவர் ஜெகநாதன், முன்னாள் செயலாளர் ஆரோக்கியசாமி, மோகன், ஒஸ்வின்ராஜ், சாமுவேல் மற்றும் திரளானவர்கள் கலந்துகொண்டனர். 
    ×