search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SA Chandra Sekar"

    • ஜெயவீரன் காமராஜ் 'மோகினிப்பட்டி' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
    • இந்த படத்தில் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

    இயக்குனர் ஜெயவீரன் காமராஜ், அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். ஒரு பிலிம் அகாடமியில் சினிமா சார்ந்த படிப்பை முடித்துவிட்டு இயக்குனர் எஸ் .ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் .இவர் மனமெங்கும் அவள் ஞாபகம், அறியாமை ,நீரின்றி அமையாது உலகு போன்ற குறும்படங்கள் மற்றும் இசை ஆல்பங்களை இயக்கியவர். இவர் தற்போது 'மோகினிப்பட்டி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு பேண்டஸி திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது.



    இப்படம் பற்றி இயக்குனர் ஜெயவீரன் காமராஜ் பேசியதாவது, மோகினிப்பட்டி என்பது கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒரு கிராமம். அந்த ஊரில் ஒரு சாபம் உள்ளது. அதை அந்த ஊர்க்காரர்கள் மட்டுமே அறிவார்கள்.அதை முன்னிட்டு அவர்களிடம் ஒரு ரகசியக் கட்டுப்பாடு உள்ளது. அதன்படி அங்கு யாரும் காதலித்து திருமணம் செய்ய முடியாது.


    இப்படிப்பட்ட சூழலில் அங்கு நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள். ஊர்க் கட்டுப்பாடு குறுக்கே நிற்கிறது. அவர்கள் அந்தச் சாபத்தை எப்படி எதிர்கொண்டார்கள்? அந்த ஊர்ச் சம்பிரதாயத்தை சமாளித்தார்களா? வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் படத்தின் கதை. இந்தக் காலத்தில் இப்படி ஒரு கதையா என்று நினைக்கலாம். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஊருக்குள்ளும் பிறருக்குத் தெரியாத ரகசியங்கள் மறைந்து கொண்டுள்ளன. அப்படி ஒரு ரகசியத்தை வைத்துதான் இப்படி ஒரு படமாக உருவாக்கி இருக்கிறோம்.


    இந்தப் படத்திற்கான கதையை எழுதி அதில் ஒரு பாத்திரத்திற்கு எஸ்.ஏ. சந்திரசேகரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அவர் நடிப்பாரா என்ற சந்தேகமும் தயக்கமும் எனக்கு இருந்தது. அப்படி ஒரு தயக்கத்தோடு தான் அவரிடம் நான் கதை சொன்னேன். அவர் கதை பிடித்து, அந்தப் பாத்திரமும் பிடித்து ஓகே சொல்லி விட்டார். அவர் இந்தப் படத்திற்கு உள்ளே வந்த பிறகு வேலைகள் மளமளவென ஆரம்பித்தன. ஆனால் அவரை நடிக்க வைக்கும் போது எனக்குப் பதற்றம் இருந்தது.



    நாம் உயரத்தில் வைத்து இயக்குனராகப் பார்த்த ஒருவரை வைத்து நாம் எப்படி இயக்குவது என்று தயக்கம் எனக்கு இருந்தது. ஆனால் அதை எல்லாம் சகஜம் ஆக்கிவிட்டு அவர் நடித்துக் கொடுத்துவிட்டார். சில காட்சிகளில் எனக்குத் திருப்தி ஏற்பட்ட போது கூட மேலும் சிறப்பாக அடுத்த ஷாட்டில் நடித்துக் கொடுத்து அந்தப் பாத்திரத்தினை மேலும் உயரத்திற்குக் கொண்டு சென்று விட்டார் .அந்த வகையில் அவரை நடிக்க வைத்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

    இதன் படப்பிடிப்பு திருச்சி பகுதியில் நடைபெற்றது. வெப்மூவிக்கான படைப்பு சுதந்திரத்தோடு இது உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இந்த படம் ஒரு நிமிடம் கூட போர் அடிக்காமல் விறுவிறுப்பாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகர்.
    • இவர் 2011-ஆம் ஆண்டு சட்டப்படி குற்றம் படத்தை இயக்கினார்.

    இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர் கடந்த 2011- ஆம் ஆண்டு "சட்டப்படி குற்றம்" என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை விளம்பரம் செய்வதற்காக சரவணன் என்பவரிடம் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் இதையடுத்து இந்த படத்தின் விளம்பர செலவு ரூ. 76 ஆயிரத்தைத் திருப்பி தராததால் விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.


    எஸ். ஏ. சந்திர சேகர்

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஏ. சந்திர சேகரிடம் பணத்தை செலுத்த உத்தரவிட்டது. ஆனால் அவர் பணத்தை செலுத்தாததால் சாலிகிராமத்தில் உள்ள எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சொந்தமான வீட்டில் உள்ள ஏ.சி, டேபிள், உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    நீதிமன்றத்தின் உத்தரவுப்படி எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டில் ஜப்தி செய்ய சென்ற ஊழியர்களை அனுமதிக்காததால் காவல்துறையின் உதவி கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ரூ. 76 ஆயிரம் பணத்திற்காக எஸ்.ஏ. சந்திர சேகரின் வீடு ஜப்தி செய்யப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், கடந்த ஆண்டு நடந்த ஒரு விழாவில் இந்துக்கள் பற்றி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கிடைத்துள்ளது. #SAChandasekar
    சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற விசிறி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், பேசும் போது ‘மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது’ என்று விமர்சித்தார்.

    இது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாக இந்து அமைப்பின் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இதையடுத்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது மத உணர்வை புண்படுத்தியதாக கூறி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து சந்திரசேகர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனு தாரர் சார்பில் வக்கீல் ஜி.மோகன கிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தர விட்டார்.
    ×