என் மலர்
நீங்கள் தேடியது "Rowdy bullet Nagarajan"
சிறைத்துறை பெண் அதிகாரிக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், ரவுடி புல்லட் நாகராஜனைப் பிடிப்பதற்கு தனிப்படை போலீசார் தேனி விரைந்துள்ளனர். #RowdyThreat #RowdyBulletNagarajan
மதுரை:

தலைமறைவாக உள்ள புல்லட் நாகராஜனைக் கைது செய்வதற்காக 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. புல்லட் நாகராஜன் தற்போது தேனியில் இருப்பதாக தகவல் வந்ததையடுத்து தனிப்படை போலீசார் தேனி விரைந்துள்ளனர். விரைவில் நாகராஜ் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. #RowdyThreat #RowdyBulletNagarajan
தேனி மாவட்டம், பெரிய குளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியான புல்லட் நாகராஜன், மதுரை சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளாவுக்கு வாட்ஸ்-அப் மூலம் மிரட்டல் விடுத்துள்ளான். இந்த கொலை மிரட்டல் ஆடியோ வைரலாக பரவி சிறைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், புல்லட் நாகராஜனின் மிரட்டல் குறித்து சிறைத்துறை அலுவலர் ஜெயராமன் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் கரிமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது.






