search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reveal freshwater"

    இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது என்று செயற்கைக்கோள்கள் மூலம் நாசா கண்டறிந்துள்ளது. #NASA
    வாஷிங்டன்:

    பூமியின் நிலத்தடி நீர்மட்டத்தை (நன்னீர்) அமெரிக்காவின் ‘நாசா’ அனுப்பிய செயற்கைக்கோள்கள் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உலக அளவில் 34 மண்டலங்களை சுமார் 14 ஆண்டுகளாக ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அதன் முதற்கட்ட தகவல்களை தற்போது வெளியிட்டு உள்ளனர்.

    இதில் பூமியின் ஈரப்பதம் மிகுந்த பகுதிகள் மேலும் ஈரமாகவும், உலர்ந்த பகுதிகள் மேலும் உலர்ந்து கொண்டே போவதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு மோசமான நீர் மேலாண்மை, பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை சுழற்சி உள்ளிட்ட பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், மத்திய கிழக்கு நாடுகள், கலிபோர்னியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாகவும், இதனால் ஏற்கனவே பிரச்சினைகள் உருவாகி இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வுக்காலத்தில் வட இந்தியாவில் போதுமான மழை இருந்தபிறகும் அரிசி, கோதுமை போன்ற பயிர்களுக்காக நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சியதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

    இது எதிர்கால வறட்சிக்கு நல்லதல்ல என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், பூமியை பொறுத்தவரை நிலத்தடி நீரே மிகவும் அத்தியாவசிய வளமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.  #NASA
    ×