என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "record of winning 7 gold"

    • மகாராஷ்டிரத்தில் நடந்த நினைவாற்றல் போட்டியில் 7 தங்க வென்று சாதனை படைத்த புதுவை கல்லூரி மாணவரை அசோக்பாபு எம்.எல்.ஏ. பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் உலக மனித முன்னேற்ற நிலையம் சார்பில் நினைவாற்றல் போட்டி நடந்தது.

    புதுச்சேரி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உலக மனித முன்னேற்ற நிலையம் சார்பில் நினைவாற்றல் போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

    இப்போட்டியில் புதுவை மாநிலத்தின் சார்பில் கல்லூரி மாணவர் விஷ்வா ராஜகுமார் பங்கேற்றார். அவர் 7 புள்ளிகளில் முதலிடம் பிடித்து 7 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

    இதையடுத்து புதுவை மாநிலத்துக்கு சிறப்பு சேர்த்த கல்லூரி மாணவர் விஷ்வா ராஜகுமார் அசோக் பாபு எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு அசோக்பாபு எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து பாராட்டினார்.

    இந்நிகழ்ச்சியின் போது பா.ஜனதா நகர மாவட்ட துணைத்தலைவர் குமார், விஜயரங்கம், நகர மாவட்ட விவசாய அணி தலைவர் அய்யனாரப்பன், முதலியார்பேட்டை தொகுதி நிர்வாகிகள் வெங்கடேசன், பன்னீர்செல்வம், பாபு, முருகன், அஜித், ஆனந்த், ரஞ்சித், கார்த்திக் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    ×