search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramanathapuram doctors strike"

    ராமநாதபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #IndianMedicalAssociation #Doctorsstrike

    ராமநாதபுரம்:

    தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முயற்சி செய்வது, ஜனநாயக மரபுக்கு எதிரானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்து வருகிறது.

    மேலும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து இன்று (சனிக்கிழமை) தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவித்தது.

    காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 70 தனியார் மருத்தவமனைகளிலும் 220 மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து மாவட்ட மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் கலீல் ரகுமான் கூறுகையில், உள்நோயாளிகள் மற்றும் பிரசவம் போன்ற அவசர சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன.

    வெளி நோயாளிகளுக்கு மட்டும் மாலை 6 மணி வரை சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது என்றார்.

    தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, வெளியூர் மற்றும் கிராமப்பகுதிகளில் இருந்து வந்த மக்கள் இன்று அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

    ×