என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Punjai Puliampatti worker"

    புஞ்சைபுளியம்பட்டி அருகே தனக்கு தானே அஞ்சலி நோட்டீஸ் அடித்து ஒட்டிவிட்டு தொழிலாளி தற்கொலை முயற்சி செய்ததாக நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 37). கட்டிட தொழிலாளி.

    இவர் நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி அம்சவேணியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை அன்பரசன் புஞ்சை புளியம்பட்டிக்கு சென்றார்.

    தான் இறந்துவிட்டதாக தனது புகைப்படத்தை கொடுத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து வந்து ஊர் முழுக்க ஒட்டியுள்ளார். இதை கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

     எலி மருந்து சாப்பிட்டதாக கூறி கட்டிலில் அன்பரசன் படுத்திருந்த காட்சி.

    அவர்கள் அன்பரசன் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது அன்பரசன் அங்கு கட்டிலில் படுத்திருந்தார். அவரிடம் உறவினர்கள் கேட்டனர்.

    தான் எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயற்சித்ததாக அன்பரசன் கூறியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அதன் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அன்பரசனை அவரது உறவினர்கள் சேர்த்தனர்.

    அன்பரசனை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதையும் படத்தில் காணலாம்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அன்பரசன் வீட்டிற்கு செல்வதாக கூறி ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறிவிட்டார். அப்போதுதான் அவர் எலி மருந்து சாப்பிட்டதாக கூறி நாடகமாடியது தெரிய வந்தது.

    இது குறித்து அவரது உறவினர்களிடம் கேட்டபோது, ‘‘அன்பரசன் மதுபோதையில் அவ்வப்போது சண்டை போடுவது வழக்கம். அதே போலத்தான் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டி விட்டு தற்கொலைக்கு முயற்சித்ததுபோல் நாடகமாடியுள்ளார்’’ என்றனர்.

    இதற்கிடையே எப்படி தனது படத்தை கொடுத்து அன்பரசன் போஸ்டர் அடித்தார் என்ற சந்தேகம் எழுந்தது. இது பற்றி விசாரித்தபோது ருசிகர தகவல் கிடைத்தது.

    போஸ்டர் அடிக்க அன்பரசன் கடைக்கு சென்ற போது அங்கிருந்தவர்கள் படத்தில் இருப்பதும் அன்பரசனும் ஒன்றுபோல் இருந்ததால் சந்தேகம் அடைந்தனர்.

    எனவே இது பற்றி அன்பரசனிடம் கேட்டுள்ளனர். அதற்கு அன்பரசன், அந்த படத்தில் இருப்பது தனது அண்ணன் என்று கூறி உள்ளார். எனவேதான் கடைக்காரர்கள் போஸ்டர் அச்சடித்து கொடுத்துள்ளனர்.
    ×