search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pune City"

    புனே அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்தை சேர்ந்த பில் பிரவுன் நியமிக்கப்பட்டுள்ளார். #PhilBrown
    புனே:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் தற்போது இடைவெளி விடப்பட்டுள்ளது. போட்டிகள் அடுத்த மாதம் தொடர்ந்து நடைபெறும்.

    இதில் பங்கேற்றுள்ள அணிகளில் ஒன்றான எப்.சி. புனே சிட்டி அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்வி, 2 டிரா என்று 11 புள்ளிகளுடன் 7-வது இடம் வகிக்கிறது. அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த ஸ்பெயினை சேர்ந்த மிக்யூல் ஏஞ்சல் போர்த்துகல் நீக்கப்பட்டார்.

    இந்த நிலையில் எஞ்சிய போட்டிகளுக்கான புனே அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்தை சேர்ந்த பில் பிரவுன் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாக்பூல், சவுத் என்ட் யுனைடெட், டெர்பி கவுண்டி போன்ற இங்கிலாந்து கிளப் அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றி இருக்கும் 59 வயதான பில் பிரவுன், புனே சிட்டி அணியை முன்னெடுத்து செல்லும் ஆவலில் இருப்பதாக கூறியுள்ளார். #PhilBrown

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 21-வது லீக் ஆட்டத்தில் கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் புனே அணியை தோற்கடித்தது. #ISL2018 #FCGoa #PuneCity
    கோவா:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 21-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா- புனே சிட்டி அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து கோவா பக்கமே கணிசமான நேரம் (62 சதவீதம்) சுற்றி வந்தது. முதல் பாதி நேரத்திற்குள் கோவா அணியில் பெர்ரன் கோரோமினாஸ் (5, 35-வது நிமிடம்), ஹூகோ போமஸ் (12-வது நிமிடம்), ஜாக்கிசந்த் சிங் (20-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். மார்சிலோ பெரீரா (8-வது நிமிடம்), எமிலியானோ ஆல்பரோ (23-வது நிமிடம்) ஆகியோர் புனே அணிக்காக பந்தை வலைக்குள் அனுப்பினர். ஆனால் பிற்பாதியில் யாரும் கோல் போடவில்லை. இறுதி கட்டத்தில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட நட்சத்திர வீரர் பெர்ரன் கோரோமினாஸ் (கோவா), டியாகோ கார்லஸ் (புனே) ஆகியோர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

    முடிவில் கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் புனே அணியை தோற்கடித்தது. 4-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 3 வெற்றி, ஒரு டிரா என்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. புனே அணிக்கு இது 3-வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
    ×