search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "princely states"

    • தளராத மன உறுதியின் காரணமாக படேல் 'இரும்பு மனிதன்' என அழைக்கப்பட்டார்
    • 2014ல் மோடி, படேல் பிறந்த நாளை 'ராஷ்ட்ரிய ஏக்தா திவஸ்' என கொண்டாட அழைப்பு விடுத்தார்

    இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 562 சமஸ்தான மன்னர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, வன்முறை சம்பவங்கள் இல்லாமல் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு ஏற்பட காரணமானவர் வல்லபாய் படேல்.

    சுதந்திர போராட்ட தலைவர்களில் ஒருவரும், 'சர்தார்' என்றும் 'இரும்பு மனிதன்' என்றும் அழைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    படேலின் நினைவாக குஜராத் மாநிலத்தில், "ஒற்றுமைக்கான சிலை" எனும் பெயரில், அவருக்கு 597 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இது உலகிலேயே உயரமான சிலை என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2014ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் துவங்கப்பட்டு, படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31, நாடு முழுவதும், 'தேசிய ஒற்றுமை தினம்' (ராஷ்ட்ரிய ஏக்தா திவஸ்) என ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.

    2016ல் படேல் மற்றும் ஒற்றுமைக்கான சிலையுடன் கூடிய சிறப்பு நினைவு அஞ்சல் தலை மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

    "தேச ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை காக்க உறுதி ஏற்கிறேன். சர்தார் படேலின் தொலைநோக்கு பார்வையால் சாத்தியமான பரந்த இந்தியாவை ஒருங்கிணைக்கும் உணர்வில் உறுதியாக இருப்பேன்" என அனைத்து அரசு அலுவலகங்களில் இன்று உறுதிமொழி ஏற்கப்படும்.

    புது டெல்லியில் "ஒற்றுமைக்கான ஓட்டம்" என்ற பெயரில் ராஜ்காட்டிலிருந்து செங்கோட்டை வரை 600 பேருக்கும் மேல் பங்கேற்கும் ஓட்டம் நடைபெற்றது. இதனை உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இன்று பிரதமர் மோடி "ஒற்றுமை சிலை"  முன்பு படேலுக்கு தனது அஞ்சலியை செலுத்தினார்.

    ×