என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pregnant woman injured"

    ஈரோடு ரெயில் நிலையத்தில் தண்ணீர் பிடிக்க ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய கர்ப்பிணி பெண் தவறி விழுந்ததால் பலத்த காயம் அடைந்தார்.
    ஈரோடு:

    பீகார் மாநிலம் ஜான்தான் பகுதியை சேர்ந்தவர் குண்டூன். இவரது மனைவி ஜோதி. இவர்கள் 2 பேரும் திருப்பூரில் உள்ள துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்தனர். ஜோதி கர்ப்பிணியாக இருந்தார்.

    நேற்று ஜோதி மட்டும் ரெயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். அவர் சென்ற ரெயில் நேற்று நள்ளிரவில் ஈரோடு ரெயில் நிலையத்தை நெருங்கியது. 2-வது பிளாட்பாரத்தில் ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தது. அப்போது பிளாட்பாரத்தில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க ஜோதி இறங்கினார்.

    ஓடும் ரெயிலில் இருந்து அவர் இறங்கியதால் பிளாட்பாரத்தில் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி திருப்பூரில் இருந்த ஜோதியின் கணவர் குண்டூனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×