என் மலர்

  நீங்கள் தேடியது "Power generation fell"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கூடுதல் உபரிநீர் திறக்கப்படுவதால் முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
  • முல்லைபெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் லோயர்கேம்ப் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தியும் குறைந்துள்ளது.

  கூடலூர்:

  கேரளாவில் கனமழை காரணமாக முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

  இந்நிலையில் வைகை அணையின் நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டி கூடுதல் உபரிநீர் திறக்கப்படுவதால் முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இன்றுகாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 132.50 அடியாக உள்ளது. வரத்து 3908 கனஅடி, திறப்பு 511 கனஅடி, இருப்பு 5282 மி.கனஅடி.

  மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடி, வரத்து 589 கனஅடி, திறப்பு 40 கனஅடியாகவும், கூடுதல் தண்ணீர் உபரியாகவும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.97 அடியாக உள்ளது. வரத்து 279 கனஅடி, திறப்பு 30 கனஅடியாகவும், கூடுதல் நீர் உபரியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

  முல்லைபெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் லோயர்கேம்ப் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தியும் குறைந்துள்ளது.

  ×