search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "postpartum foods"

    • கர்ப்பிணிகள் சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    • மதுவை முற்றிலும் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

    நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது நீங்கள் கற்றுக் கொள்ளும் முதல் விஷயங்களில் ஒன்று என்ன சாப்பிடக்கூடாது என்பதுதான். நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    காபி

    மருத்துவர்களின் அறிவுரைப் படி, கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக ஒரு நாளைக்கு 200 மில்லிகிராம் (மி.கி.) குறைவான காஃபின் மட்டும் எடுத்துகொள்ளுமாறு கூறுகின்றனர். அதற்கு மேல் எடுப்பதை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறார்கள். காஃபின் மிக விரைவாக உறிஞ்சப்பட்டு நஞ்சுக்கொடியை எளிதில் கடக்கிறது. குழந்தைகள் மற்றும் அவர்களின் நஞ்சுக்கொடிகளில் காஃபின் வளர்சிதை ஏற்படுத்தும் என்பதால் இது அதிக அளவு ஆபத்திற்கு வழிவகுக்கும். பிரசவத்தின்போது குறைந்த எடையுடன் பிறக்கும் அபாயத்தை அதிகரிப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    மெர்குரி மீன்

    பெரிய கடல் மீன்கள் அதிக அளவு பாதரசத்தை கொண்டது. அதனால் வாரத்திற்கு 180 கிராமிற்கு குறைவாக எடுத்து கொள்ளலாம். இல்லையென்றால் தவிர்த்துவிடலாம். சூரை மீன், சுறா மீன், புள்ளி களவா மீன், சங்கரா மீன்கர்ப்பம் போன்ற மீன்களை பாலூட்டும் போது இதுபோன்ற பாதரசம் நிறைந்த மீன்களைத் தவிர்ப்பது நல்லது.

    நன்கு சமைக்காத இறைச்சி

    பச்சை மீன், குறிப்பாக மட்டி, பல்வேறு நோய்த்தொற்றுகளை சுமந்து செல்லும். இதில் நோரோவைரஸ், விப்ரியோ, சால்மோனெல்லா மற்றும் லிஸ்டீரியா போன்ற வைரஸ், பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணி போன்ற நோய்த்தொற்றுகளை வர வைக்கலாம்.

    கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக பட்டியலிடப்பட்ட நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகிறார்கள். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) படி, பொது மக்களை விட கர்ப்பிணி பெண்கள் லிஸ்டீரியாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 10 மடங்கு அதிகம்.

    அதிக கொழுப்பு உணவுகள்

    பன்றிக்கொழுப்பு, மாட்டிறைச்சி கொழுப்பு, கோழி கொழுப்பு, வெண்ணெய், கிரீம், சீஸ் இந்த கெட்ட கொழுப்புகள் சில பல இனிப்புகள் மற்றும் பிற பால் பொருட்களிலும் மறைந்துள்ளன. அதாவது பொரித்த கோழி, ஐஸ்கிரீம், பீட்ஸா, குக்கீகள், டோனட்ஸ், பேஸ்ட்ரிகள் ஆகியவை கர்ப்பம் தரிக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் ஆகும்.

    பதப்படுத்தப்படாத பால்

    கொழுப்பு நீக்கப்பட்ட பால், மொஸரெல்லா மற்றும் பாலாடைக்கட்டி போன்ற குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம். இருப்பினும், பேஸ்டுரைஸ் செய்யப்படாத பால் பொருட்களின் உணவு விஷத்தை ஏற்படுத்தும்.

    மது

    கர்ப்ப காலத்தில் மது அருந்துவதது கருச்சிதைவு மற்றும் பிரசவத்தின் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால் மது அருந்த கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. சிறிய அளவு கூட குழந்தையின் மூளை வளர்ச்சியை மோசமாக பாதிக்கும்.

    கர்ப்ப காலத்தில் மது அருந்துவது, முக குறைபாடுகள், இதய குறைபாடுகள் மற்றும் மனநல குறைபாடு உள்ளிட்ட கருவின் ஆல்கஹால் நோய்க்குறியையும் ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் மதுவை முற்றிலும் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

    சோடா போன்ற குளிர் பானங்கள்

    சோடா போன்ற குளிர் பானங்களில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் பல காஃபின் மற்றும் பிற பொருட்கள் உள்ளன. கர்ப்ப காலத்தில் இது அருந்த பரிந்துரைக்கப்படுவதில்லை.

    முட்டை

    பச்சை முட்டைகள் சால்மோனெல்லாவால் மாசுபட்டிருக்கலாம். சால்மோனெல்லா நோய்த்தொற்றின் அறிகுறிகளில் காய்ச்சல், குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும்.

    முளைகட்டிய பயிர்கள்

    முளை கட்டிய பயிரில் சால்மோனெல்லா என்ற நோய்கிருமி இருக்கும். விதை முளைப்பதற்குத் தேவையான ஈரப்பதமான சூழல் இந்த வகை பாக்டீரியாக்களுக்கு ஏற்றது மற்றும் முளை கட்டிய பயிரினை கழுவுவது கடினம். இந்த காரணத்திற்காக, முளை கட்டிய பயிர்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

    துரித உணவுகள்

    கர்ப்ப காலத்தில் ஹோட்டல்களில் விற்கப்படும் துரித உணவுகளை தவிர்த்து புரதம், காய்கறிகள் மற்றும் பழங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் மாவுச்சத்துள்ள காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டுகளை மையமாகக் கொண்ட உணவு மற்றும் சிற்றுண்டிகளை எடுத்துகொள்ளுங்கள். சுவையை இழக்காமல் உங்கள் உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

    ×