search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pongal money conflict"

    அயனாவரம் மார்க்கெட் பகுதியில் உள்ள ரே‌சன் கடையில் பொங்கல் பணம் நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பொருட்கள் மற்றும் ரொக்கம் ரூ.1000 வாங்குவதற்காக அயனாவரம் மார்க்கெட் தெருவில் உள்ள ஆவின்பூத் அருகில் மக்கள் திரண்டனர்.

    ஒரே இடத்தில் 6 ரே‌ஷன் கடைகள் அங்கு செயல்படுவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காலையிலேயே குவிந்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    ரே‌ஷன் கடைகளுக்கு பொங்கல் பொருட்கள் வந்த போதிலும் பணம் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் வரிசையில் நின்ற பொதுமக்கள் ரே‌ஷன் கடை ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் 6 ரே‌ஷன் கடைகளிலும் ரூ.1000 வீதம் வழங்கப்பட்டது. 30 பேருக்கு மட்டுமே வழங்கினார்கள். அதன் பின்னர் கொடுப்பதற்கு பணம் இல்லை. இதனால் ரே‌ஷன் கடைகள் முன்பு வரிசையில் நின்ற மக்கள் ஆத்திரம் அடைந்தனர். இன்று தருவதாக கூறிவிட்டு பல மணி நேரம் நிற்க வைத்து அலைக்கழிப்பதாக தெரிவித்தனர்.

    பொங்கல் பணம் ஒரு சிலருக்கு கொடுத் விட்டு நிறுத்தப்பட்டதால் ஆவேசம் அடைந்த மக்கள் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானதை தொடர்ந்து போலீசார் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தனர்.

    இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “பொங்கல் பொருட்கள் தொகுப்பு அனைத்து ரே‌சன் கடைகளுக்கும் நேற்றே சென்று விட்டன. பணம் வங்கியில் இருந்து இன்று காலையில் எடுத்த பிறகுதான் வழங்க முடியும். இதனால் இன்று பணம் வினியோகம் தாமதமாகும். நாளை முதல் காலை 8.30 மணியில் இருந்து கிடைக்கும்.

    ரே‌ஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் பணம் கட்டாயம் கிடைக்கும். யாரும் அவசரப்பட வேண்டாம்” என்றார்.

    ×