என் மலர்
நீங்கள் தேடியது "Pondy Bazaar escaped prisoner"
சென்னை:
தி.நகர் பகுதியில் பாண்டி பஜார் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணிகண்டன் என்ற பழைய குற்றவாளி சிக்கினார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பதும், செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 செல்போன்களும் சிக்கின. பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று மணிகண்டன் கை விலங்குடன் தப்பி ஓடி விட்டார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தார்.
இதனை தொடர்ந்து தப்பி ஓடிய மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசாரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய மணிகண்டன், விருகம்பாக்கத்தில் வசித்து வந்தார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பணியின்போது கவனக்குறைவாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.






