search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "points on Sun"

    சூரியனில் தோன்றிய புள்ளிகளால் ஏற்படும் காந்தப்புயலால் செயற்கைகோள்களுடன் உள்ள தொடர்பு துண்டிக்கும் அபாயம் உள்ளது என்று கொடைக்கானலில் உள்ள வானியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி குமரவேல் கூறினார். #Sun #Satellites
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் வானியல் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சூரியனை குறித்த ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் அங்கு பணிபுரியும் விஞ்ஞானி குமரவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் புள்ளிகள் தோன்றி வருகின்றன. இதில் 5½ ஆண்டுகள் குறைவாகவும், 5½ ஆண்டுகள் அதிகமாகவும் புள்ளிகள் தோன்றுகின்றன. கடந்த 2013-ம் ஆண்டு சூரியனில் அதிக புள்ளிகள் காணப்பட்டன. இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக பூமியைவிட சுமார் 5 மடங்கு அளவில் பெரியதாக சூரிய புள்ளி தோன்றியுள்ளது. இதன் காரணமாக சூரிய காந்தப்புயல் அடிக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.

    இதனால் பூமிக்கு நேரடியாக பாதிப்பு இல்லையென்றாலும் சூரிய புள்ளிகள் வெடித்து சிதறும்போது செயற்கைக்கோள்களுடன் உள்ள தொடர்பு துண்டிக்கும் அபாயம் உள்ளது. இதனால் தொலைத்தொடர்பு சாதனங்களின் பாகங்கள் பாதிப்பு அடையும் நிலை ஏற்படும். இதன் நிலைமை குறித்து இனி அடுத்து வரும் சில நாட்களில் தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sun #Satellites
    ×