என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pharmacies"

    ஆன்லைன் மருந்து விற்பனை கண்டித்து கோவையில் இன்று 3 ஆயிரம் மருந்து கடைகள் அடைக்கப்பட்டன.
    திருப்பூர்:

    ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதை கண்டித்து அகில இந்திய மருந்து விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் இன்று மருந்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம் மொத்த மற்றும் சில்லறை விற்பனை மருந்து கடைகள் உள்ளது. இவற்றில் பெரும்பாலான மருந்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    கோவை மாவட்டத்தில் 3 ஆயிரம் மருந்து கடைகள் மூடப்பட்டு இருந்தது. மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்படும் மருந்து கடைகள் இயங்கியது.

    திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 840 மருந்து கடைகள் உள்ளது. இவற்றில் 790 மருந்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. அம்மா மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளுடன் இயங்கும் மருந்தகம் மட்டும் செயல்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மருந்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையுடன் இயங்கும் மருந்தகங்கள் வழக்கம்போல் செய்யப்பட்டது.
    ×