என் மலர்
நீங்கள் தேடியது "Peravurani road problem"
பேராவூரணி:
பேராவூரணி அடுத்த காலகம் ஆவுடையார்கோயில் சாலையில் ரெட்டவயலிலிருந்து கொளக்குடி வரை செல்லும் சாலையில் ஆங்காங்கே சாலை குண்டும் குழியுமாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பிரசித்தி பெற்ற மாணிக்கவாசகரால் புகழ் பெற்ற ஆவுடையார்கோயில் உள்ளது. பேராவூரணியிலிருந்து இக்கோயிலுக்கு செல்ல பக்தர்கள் இச்சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.
கொளக்குடி கடைத்தெரு பகுதியில் சாலையின் மையத்தில் பெரிய பள்ளம் உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்லும் பயணிகள் அடிக்கடி விழுந்து விபத்து நடக்கிறது. இதுகுறித்து மக்கள் நேர்காணல் முகாமில் ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். பருவமழை தொடங்க இருப்பதால் நெடுஞ்சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






