என் மலர்
நீங்கள் தேடியது "pattiveeranpatti accident"
வத்தலக்குண்டு:
தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ஒரு லாரி பட்டிவீரன்பட்டி அருகே நின்று கொண்டிருந்தது. டீசல் பற்றாக்குறை காரணமாக லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் அருகில் இருந்த கடைக்கு சென்று விட்டார். நேற்று இரவு திண்டுக்கல்லில் இருந்து உத்தமபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் சாலையோரம் நின்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் கார் ஓட்டுனர் காஜாமைதீன் (வயது 38) காரில் வந்த மரியதாஸ் (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் பட்டி வீரன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்த வர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் வந்த மரியதாசின் மனைவி ஆரோக்கியமேரி (50), படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.






